தூத்துக்குடியில் சி.ஐ.டி.யு.வினர் ரோட்டில் வாகனங்களை நிறுத்தி போராட்டம்
தூத்துக்குடியில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி சிஐடியுவினர் சாலையில் வாகனங்களை நிறுத்தி போராட்டம் நடத்தினர்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி சி.ஐ.டி.யு.வினர் சாலையில் வாகனங்களை நிறுத்தி போராட்டம் நடத்தினர்.
போராட்டம்
தூத்துக்குடி மாவட்ட சி.ஐ.டியு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம், தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம், தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் சார்பில், பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்க வலியுறுத்தி 10 நிமிடம் இயங்கும் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தும் போாராட்டம் நடத்தப்பட்டது. தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நடந்த போாராட்டத்துக்கு சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரசல் தலைமை தாங்கினார்.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்கள் வாகனங்களை நடுரோட்டில் நிறுத்தி கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிறிது நேரத்துக்கு பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
கலந்து கொண்டவர்கள்
போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாநில குழு உறுப்பினர் அர்ச்சுனன், மாநகர செயலாளர் ராஜா, விவசாய சங்கம் சீனிவாசன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில குழு உறுப்பினர் முத்து, ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் பூமயில், இந்திய மாணவர் சங்கம் கார்த்திக் ஸ்ரீநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.