குடும்பத்தகராறு காரணமாக பெண் தூக்குப்போட்டு தற்கொலை

குடும்பத்தகராறு காரணமாக பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2021-12-10 11:57 GMT
உத்திரமேரூர் அடுத்த விசூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள் ராஜலட்சுமி (வயது 21). இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம் வெண்பாக்கம் தாலுகா ஹரிஹர பாக்கம் கிராமத்தை சேர்ந்த கோபி என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஜலட்சுமி தாய் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு கொண்டார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் ராஜலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து பெருநகர் போலீ்சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி 3 வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்