4-வது மாடியில் இருந்து தூக்கி வீசி நாயை கொடூரமாக கொன்ற வாலிபர்

4-வது மாடியில் இருந்து தூக்கி வீசி நாயை கொடூரமாக கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-12-10 10:47 GMT
சென்னை அயோத்திகுப்பம் பகுதியில் வசிப்பவர் பிரவீன். இவர், ஆசையாக நாய் ஒன்றை வளர்த்து வந்தார். பிரவீன், குடிசைமாற்று வாரிய குடியிருப்பு 4-வது மாடியில் வசித்தார். நேற்று முன்தினம் பிரவீன் வசித்த 4-வது மாடிக்கு சிலர் வந்தனர். அவர்களை பார்த்து பிரவீன் வளர்த்த நாய் குரைத்ததாக தெரிகிறது.

உடனே அந்த நபர்கள், அன்பாக தடவி கொடுப்பதுபோல நடித்து, நாயை தூக்கி 4-வது மாடியில் இருந்து கீழே வீசியதாக கூறப்படுகிறது. அதில் பலத்த காயம் அடைந்த நாய், பரிதாபமாக செத்தது.

நாய் செத்துபோனதை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரவீன், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி மெரினா போலீசில் புகார் கொடுத்தார். இதுபற்றி மெரினா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். நாயை 4-வது மாடியில் இருந்து தூக்கி வீசி கொடூரமாக கொன்றதாக, சேப்பாக்கம் லாக் நகரைச்சேர்ந்த ஸ்டெர்லின் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்