திருவொற்றியூரில் சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்

திருவொற்றியூரில் சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

Update: 2021-12-10 09:32 GMT
திருவொற்றியூர் பெரியார் நகர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஒரு ஜோடிக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றது. இதில் மணப்பெண் 15 வயதான சிறுமி என்பது தெரியவந்தது. இதுபற்றி குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து சென்று, திருமண வீட்டாரிடம் விசாரித்தனர். அதில் மணப்பெண் சிறுமி என உறுதியானது. இதையடுத்து சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். பின்னர் சிறுமியை எண்ணூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்து ஒப்படைத்தனர். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்