100 வார்டுகளில் 13.27 லட்சம் வாக்காளர்கள்
மதுரை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி 100 வார்டு களில் 13 லட்சத்து 27 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.
மதுரை,
மதுரை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி 100 வார்டு களில் 13 லட்சத்து 27 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர் பட்டியல்
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. எனவே நகர்புற உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
அதில் முதல்கட்டமாக தற்போது வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி மதுரை மாநகராட்சி பகுதியில் 100 வார்டுகளில் உள்ள வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
மதுரை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் வாக்காளர் பட்டியலை வெளி யிட்டார். அதில் மதுரை மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட 100 வார்டுகளில் மொத்தம் 13 லட்சத்து 27 ஆயிரத்து 894 வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்குச்சாவடி மையங்கள்
அதில் ஆண்கள் 6 லட்சத்து 25 ஆயிரத்து 617. பெண்கள் 6 லட்சத்து 75 ஆயிரத்து 139. திருநங்கைகள் 138. அதே போல் மாநகராட்சி பகுதிகளில் மொத்தம் 1,317 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர்கள் தட்சிணாமூர்த்தி, சுரேஷ்குமார், அமிர்தலிங்கம், உதவி ஆணையாளர் (வருவாய்) ரங்கராஜன், உதவி செயற்பொறியாளர் (திட்டம்) சுப்புதாய், மக்கள் தொடர்பு அலுவலர் மகேசுவரன், மாமன்ற செயலாளர் (பொறுப்பு) ஜார்ஜ் ஆலிவர் லாரன்ஸ் உட்பட அரசியல் கட்சி பிரமுகர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.