செல்பி எடுக்க புதிய இடம்
ரெயில் நிலையத்தில் செல்பி எடுக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் விசாலமானது. பயணிகளின் நலன்கருதி ரெயில் நிலையம் மற்றும் முன்புற வளாகத்தில் டைல்ஸ்களால் ஆன அழகிய தரைகள், அழகு தரும் மரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முகப்பு பகுதியில் பழங்கால ரெயில் என்ஜின் ஒன்றும் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது பயணிகள் செல்பி எடுத்துக் கொள்ள வசதியாக ஐ லவ் திருச்சி என்ற ஆங்கில எழுத்துக்களில் ரெயில் நிலைய வளாகத்தில் செல்பி கார்னர் அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடம் கலர், கலரான விளக்குகளில் ஜொலிப்பதை படத்தில் காணலாம்.