சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு, திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2021-12-09 20:35 GMT
திண்டுக்கல்: 

சிறுமி கர்ப்பம் 
திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, 13 வயது சிறுமி சிகிச்சைக்கு வந்தாள். டாக்டர் பரிசோதனை செய்த போது, சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுபற்றி திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையிலான போலீசார் விரைந்து சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலையை சேர்ந்த கூலித்தொழிலாளி மணி (வயது 25), பாலியல் பலாத்காரம் செய்ததில் சிறுமி கர்ப்பமானது தெரியவந்தது. இதுகுறித்து அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து மணியை கைது செய்தனர். இந்த வழக்கு, திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் நடைபெற்றது.

10 ஆண்டு சிறை 
அப்போது டி.என்.ஏ. பரிசோதனை செய்து அதன் அறிக்கையையும் போலீசார் கோர்ட்டில் சமர்ப்பித்தனர். இந்த வழக்கை நீதிபதி புருஷோத்தமன் விசாரித்தார். 

இந்த நிலையில் வழக்கு விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட மணிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்