லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; மளிகை கடைக்காரர் பலி
நெல்லையில் லாரி-மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்டதில் மளிகை கடைக்காரர் பரிதாபமாக இறந்தார்.;
நெல்லை:
நெல்லையில் லாரி-மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்டதில் மளிகை கடைக்காரர் பரிதாபமாக இறந்தார்.
லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஐரவன் பட்டியை சேர்ந்தவர் செல்வின் ஜெபராஜ் (வயது 60). இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் செல்வின் ஜெபராஜ் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் நெல்லைக்கு வந்து விட்டு, தனது ஊருக்கு சென்றுகொண்டிருந்தார். மோட்டார் சைக்கிள் நெல்லையை அடுத்த சிதம்பர நகர் விலக்கு பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக செல்வின் ஜெபராஜ் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
பரிதாப சாவு
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.