3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

நெல்லை மாவட்டத்தில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.;

Update: 2021-12-09 19:45 GMT
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

வாலிபர்

நெல்லை மாவட்டம் இட்டமொழி தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் ராஜவேல் (வயது 31). இவர் போக்சோ வழக்கில் வள்ளியூர் அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில் ராஜவேலை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடும்படி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், மாவட்ட கலெக்டர் விஷ்ணுவுக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் அதனை ஏற்று, ராஜவேலை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
இதனை அடுத்து போலீசார் ராஜவேலை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகலை சிறை அதிகாரிகளிடம் நேற்று ஒப்படைத்தனர்.

மேலும் 2 பேர்

பணகுடி அருகே உள்ள காவல்கிணறு பாரதி நகரைச் சேர்ந்தவர் ஜேசு அந்தோணி ராஜ் (45). இவர் ஒரு கொலை வழக்கில் பணகுடி போலீசாரால் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தலை சேர்ந்த குருந்தன் மகன் அருண்குமார் (23) என்பவர் வழிப்பறி, கொள்ளை ஆகிய வழக்குகளில் உவரி போலீசாரால் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், மாவட்ட கலெக்டர் விஷ்ணுவுக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் அதனை ஏற்று அருண்குமார், ஜேசு அந்தோணி ராஜ் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவு நகலை அந்தந்த போலீஸ் நிலைய போலீசார் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்