போக்சோ சட்டத்தில் கரூர் வாலிபர் கைது

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கரூர் வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.;

Update: 2021-12-09 18:51 GMT
கரூர், 
கரூரை சேர்ந்த 15 வயது சிறுமி அங்குள்ள ஒரு பள்ளியில்10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் கவுதம் (வயது 20) என்ற வாலிபர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து கரூர் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரூபி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கவுதமனை கைது செய்து சிறையில் அடைத்தார்.

மேலும் செய்திகள்