மண் அள்ளும் எந்திரம் மோதி தொழிலாளி படுகாயம்
மண் அள்ளும் எந்திரம் மோதி தொழிலாளி படுகாயம் அடைந்தார்
சிவகாசி
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவை சேர்ந்தவர் மாரியப்பன்(வயது 30). இவர் திருத்தங்கலில் உள்ள ஒரு கல்குவாரியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் மாரியப்பன் வேலை முடிந்து மோட்டார் சைக்களில் சிவகாசி-எரிச்சநத்தம் ரோட்டில் வந்து கொண்டிருந்தார். காளையார்குறிச்சி கண்மாய் அருகில் சென்றபோது அந்த வழியாக வந்த மணல் அள்ளும் எந்திரம் மாரியப்பன் மீது மோதியது.
இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அந்த வழியாக சென்றவர்கள் மாரியப்பனை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.