மாட்டை திருடி கொன்ற கும்பல்

மாட்டை திருடி கொன்ற கும்பல் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2021-12-09 18:28 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள செண்பகத்தோப்பு சேர்ந்தவர் பாண்டியராஜ். விவசாயி. இவர் மாடு வளர்த்து வந்தார். இந்தநிலையில் மாட்டைக் காணவில்லை என வனப்பகுதிக்குள் சென்று பார்த்தபோது சிறிது தூரத்தில் மாட்டின் தலை, உடல் மட்டும் கிடந்தது. மாட்டை திருடிச்சென்று இறைச்சிக்காக கொன்றதாக தெரிகிறது. மேலும் வந்த கும்பல் காரில் சென்றதாக விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்