791 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

791 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

Update: 2021-12-09 18:28 GMT
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள குல்லூர்சந்தை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் 791 பயனாளிகளுக்கு ரூ.19 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனுப்பங்குளம், மல்லாங்கிணறு, ஆனைக்குட்டம், செவலூர், மொட்டமலை, கண்டியாபுரம், குல்லூர்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 1,002 பயனாளிகளுக்கு ரூ.66 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்க உத்தரவிட்டுள்ளார். 
அதன் அடிப்படையில் ஏற்கனவே காரியாபட்டி அருகே உள்ள மல்லாங்கிணறு முகாமில் 159 பேருக்கு ரூ.2.5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தற்போது குல்லூர்சந்தை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து மற்ற பகுதிகளில் உள்ள இலங்கை தமிழர்கள் முகாம்களில் உள்ளவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன், அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. கல்யாண்குமார், தாசில்தார் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்