மான்குட்டி வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
வயலில் இருந்த மான்குட்டி வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
சாத்தூர்
சாத்தூர் அருகே நல்லான்செட்டிபட்டியை சேர்ந்தவர் அருள்ராஜ்(வயது 49). இவர் சாத்தூர் நெடுஞ்சாலைதுறையில் சாலை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். மேலும் இவருக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். நேற்று காலை வயல்களை பார்க்க சென்றபோது, அங்கு பிறந்து ஒரு மாதமே ஆன மான் குட்டி இருப்பதை பார்த்துள்ளார். அதை பாதுகாப்பாக வீட்டிற்கு எடுத்து வந்த அவர் இதுகுறித்து உடனடியான வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினரிடம் அவர் அந்த மான் குட்டியை ஒப்படைத்தார்.