3 மூட்டை புகையிலை பொருட்கள் பறிமுதல்

3 மூட்டை புகையிலை பொருட்கள் பறிமுதல்;

Update: 2021-12-09 18:16 GMT
வேலூர்

வேலூர் வடக்கு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் தலைமை ஏட்டு ராஜா, 2 ஊர்க்காவல்படையினர் நேற்று முன்தினம் நள்ளிரவு வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் பிளாஸ்டிக் மூட்டைகளுடன் வந்த 2 வாலிபர்களை போலீசார் நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் கொணவட்டத்தை சேர்ந்த ரவிகுமார் (வயது 30), ஸ்டீபன் (26) என்பதும், 2 மூட்டைகளிலும் புகையிலை பொருட்கள் இருப்பதும் தெரிய வந்தது. மேலும் குடியாத்தம் அப்பாக்குட்டி தெருவை சேர்ந்த சஜித் (34) என்பவரிடம் இருந்து அவர்கள் புகையிலை பொருட்கள் வாங்கி வந்து வேலூரில் விற்பனை செய்வதாக தெரிவித்தனர்.

அதையடுத்து மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் குடியாத்தத்தில் உள்ள சஜித் வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அங்கு ஒரு மூட்டையில் புகையிலை பொருட்கள் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரித்தனர்.

இதையடுத்து சஜித், ரவிக்குமார், ஸ்டீபன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 மூட்டை புகையிலை பொருட்கள், மொபட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. நள்ளிரவில் சிறப்பாக வாகன தணிக்கையில் ஈடுபட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணனுக்கு, வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

மேலும் செய்திகள்