செல்போனில் பேசியதை கண்டித்ததால் கூலிப்படை ஏவி கொன்றேன் கைதான மகள் பரபரப்பு வாக்குமூலம்

குளச்சல் அருகே தி.மு.க. பிரமுகர் கொலை ெசய்யப்பட்ட சம்பவத்தில் அவரது மகள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மகள் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் ெசல்போனில் ேபசுவதை கண்டித்ததால் கூலிப்படை ஏவி கொன்றதாக கூறினார்.

Update: 2021-12-09 17:41 GMT
்குளச்சல், 
குளச்சல் அருகே தி.மு.க. பிரமுகர் கொலை ெசய்யப்பட்ட சம்பவத்தில் அவரது மகள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். 
தி.மு.க. பிரமுகர் கொலை 
குளச்சல் அருகே உள்ள செம்பொன்விளை மின்வாரிய அலுவலகம் அருகில் வசித்து வந்தவர் குமார் சங்கர் (வயது 52). ரீத்தாபுரம் பேரூராட்சி 15-வது வார்டு தி.மு.க. கிளை செயலாளராக இருந்து வந்தார். இவர் கடந்த 6-ந் தேதி இரவு வீட்டில் இருந்தார். அப்போது ஒரு நபர் வந்து அவரை வெளியே அழைத்து சென்றார். வீட்டில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் சென்ற போது அந்த நபர் குமார் சங்கரிடம் தகராறு செய்து கத்தியால் குத்தி கொலை ெசய்து விட்டு தப்பி சென்றார். 
இந்த கொலை தொடர்பாக குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து திக்கணங்கோட்டை சேர்ந்த ஸ்ரீ முகுந்தன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த வழக்கில் குமார் சங்கரின் மகள் தீபாவதி (26) மற்றும் அவரது 18 வயது நண்பருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தீபாவதி மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர். 
வாக்குமூலம்
கைது செய்யப்பட்ட தீபாவதி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:- 
எனது தந்தை குமார் சங்கருக்கு மது பழக்கம் உண்டு. தினமும் மது குடித்து விட்டு வந்து தகராறு செய்து வந்தார். நான் செல்போனில் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் என்னை சந்தேகத்தில் கண்டித்து திட்டுவார். அத்துடன் குடும்பத்தையும் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்தார். எனது தந்தை ஏன் இப்படி இருக்கிறார்? என நினைத்தேன். இதனால் அவர் மீது வெறுப்பு வந்தது.
தந்தை என்னை திட்டுவதை எனது 18 வயது நண்பரிடம் தெரிவித்தேன். அதற்கு அவர், ‘உனது தந்தையை கொலை செய்து விடலாம்’ என என்னிடம் கூறினார். எனக்கு முதலில் அதிர்ச்சியாக இருந்தது. இருந்தாலும் என்னை எனது தந்தை டார்ச்சர் செய்து வந்தது நினைவில் வந்து சென்றது. இதனால் எனது தந்தையை கொலை செய்ய சம்மதித்தேன்.
இதனையடுத்து எனது நண்பரின் நண்பரான திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ முகுந்தனை தொடர்புகொண்டோம். அவர் கூலிப்படையை ஏவி கொலை செய்ய ஒரு லட்சம் ரூபாய் கேட்டார். பின்னர் ரூ.60 ஆயிரம் தருவதாக கூறினோம். அதற்கு ஸ்ரீ முகுந்தனும் ஒப்புக்கொண்டார். இதற்கு முன்பணமாக ரூ.10 ஆயிரம் கொடுத்தோம். 
கொலை நடந்த அன்று எனது தந்தை வீட்டில் இருந்த போது ஸ்ரீ முகுந்தன் வந்து எனது தந்தையை அழைத்துச் சென்றார். பின்னர் எனது தந்தையை ஸ்ரீ முகுந்தன் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு சென்றுவிட்டார்.
சிறையில் அடைப்பு
போலீசார் விசாரணை நடத்திய போது ஒருவர் வந்து எனது தந்தையிடம் தகராறு செய்து கொலை செய்துவிட்டார் என கூறினேன். இதனால் எங்களை போலீசார் பிடிக்க மாட்டார்கள் என நினைத்தேன். 
ஆனால் போலீசார் எங்கள் 3 பேரையும் பிடித்துவிட்டனர்.
இவ்வாறு தீபாவதி கூறியதாக போலீசார் தெரிவித்தனர். 
கைது செய்யப்பட்ட தீபாவதி, ஸ்ரீ முகுந்தன் மற்றும் 18 வயது நண்பர் ஆகிய 3 பேரையும் போலீசார் இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர், தீபாவதியை தக்கலை சிறையிலும், முகுந்தன் மற்றும் 18 வயது நண்பர் ஆகியோரை நாகர்கோவில் மாவட்ட சிறையிலும் அடைத்தனர். இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உண்டா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்