சென்ட்ரிங் சீட் விழுந்து வடமாநில தொழிலாளி பலி

சென்ட்ரிங் சீட் விழுந்து வடமாநில தொழிலாளி பலி

Update: 2021-12-09 17:40 GMT
சோளிங்கர்

திருப்பாற்கடல் பாலாற்றிலிருந்து-திருத்தணி நகருக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தின்கீழ் சோளிங்கர் அடுத்த கிருஷ்ணாபுரம் அருகே மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி கட்டும் பணி நடக்கிறது. இதில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று கட்டுமான பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியின் மேலிருந்து சென்ட்ரிங் சீட் சரிந்து ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கம்டாராம் (வயது 40), கிராண்டிபஸ்வான் (30) ஆகியோர் மீது விழுந்தது. 

இதில் படுகாயமடைந்த கம்டாராம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த கிராண்டி பஸ்வான் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் சென்று கம்டாராமின் உடலை பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து கொண்ட பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்