முதுகுளத்தூர் அருகே உள்ள செல்வநாயகபுரம் ஊராட்சியில் 100 நாள் வேலை முறையாக வழங்கவில்லை என கூறி பெண்கள் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். செல்வநாயகபுரம் ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 100 நாள் வேலையை முறையாக வழங்கவில்லை, குறைந்த நாள் வேலை தருகின்றனர். சம்பளம் குறைவாக வழங்குகின்றனர் என புகார் தெரிவித்தனர். இத்தகவலை அறிந்த ஒன்றிய ஆணையாளர் ராஜேந்திரன், துணை ஆணையாளர் கருப்பையா ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது ராஜேந்திரன் கூறுகையில், மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று சுழற்சிமுறையில் வேலைவாய்ப்பு அளிக்கப்படும். முறையாக வேலை வழங்கப்படும் என உறுதி அளித்த பின்பு பெண்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.