தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை திருட்டு
தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை திருட்டு
ஆம்பூர்
ஆம்பூரை அடுத்த வடபுதுப்பட்டு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். தச்சுவேலை செய்து வருகிறார். இவரது மனைவி செந்தாமரை, ஷூ கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இருவரும் காலையில் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுள்ளனர்.
இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த 14 பவுன் நகைகளை திருடிசென்றுள்ளனர். மாலையில் வீடு திரும்பிய விஜயகுமார் மற்றும் செந்தாமரை வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு நகை திருடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் தாலுகா போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.