நாமக்கல்லில் இருசக்கர வாகனங்கள் திருடிய 4 பேர் கைது

நாமக்கல்லில் இருசக்கர வாகனங்கள் திருடிய 4 பேர் கைது

Update: 2021-12-09 16:48 GMT
நாமக்கல்:
நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் இருசக்கர வாகனங்கள் திருட்டு போய் வருகிறது. எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையிலான போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். அதன்படி நேற்று முன்தினம் காலை நாமக்கல்- துறையூர் சாலை அண்ணாநகர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் சந்தேகப்படும்படியாக வந்த 4 பேரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் நாமக்கல் மேட்டுத்தெருவை சேர்ந்த பாலாஜி சாய் (வயது 23), எருமப்பட்டி பிரகாஷ் (21), சேந்தமங்கலம் தினகரன் (22) மற்றும் கணேசபுரத்தை சேர்ந்த 18 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டவை என்பதும், அவர்கள் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் திருட்டு போன 6 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்