செஞ்சியில் பெண்களிடம் நகை பறித்த வாலிபர் கைது

செஞ்சியில் பெண்களிடம் நகை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டாா்.

Update: 2021-12-09 16:46 GMT
செஞ்சி, 

செஞ்சி கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் சேகர் ராஜ் மனைவி கண்ணகி(வயது 49). சம்பவத்தன்று இவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் கண்ணகி கழுத்தில் அணிந்திருந்த 13 பவுன் தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதேபோல் செஞ்சி சங்கரன் தெருவை சேர்ந்த தர்மன் மனைவி பானுமதி என்பவர் வீட்டுக்கு வெளிய கோலம் போட்டுக் கொண்டிருந்தபோது அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையையும் மர்மநபர் ஒருவர் பறித்து சென்று விட்டார். 

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், இன்ஸ்பெக்டர் சக்தி, சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சென்னை ஜாபர் கான் பேட்டையை சேர்ந்த தினேஷ் என்ற தினேஷ்குமார்(31) என்பவர் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர் நாமக்கல் மாவட்டத்தில் நடந்த வழிப்பறி வழக்கில் சிறையில் உள்ளார். இதையடுத்து தினேஷ் என்ற தினேஷ் குமாரை செஞ்சி போலீசார் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். தொடர்ந்து தினேசை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த 10 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்