புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

Update: 2021-12-09 15:25 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி கோவை ரோட்டில் நகர கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காலேப் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்த நபரை மறித்து சோதனை செய்தனர். அப்போது அவரிடம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. மேலும் அவர் கோவை ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளுக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து நெ.10 முத்தூரை சேர்ந்த ஹரிராமகிருஷ்ணன் (வயது 40) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 10 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்