முன்விரோதத்தில் இருதரப்பினரிடையே மோதல்; 10 பேர் மீது வழக்கு

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூரில் முன்விரோதத்தில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

Update: 2021-12-09 15:10 GMT
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் ராமன் கோவில் கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சய். இவர் நேற்று முன்தினம் தன் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த குப்பன், வெங்கடேசன், பாரத், ரகு, சாமுண்டீஸ்வரி ஆகிய 5 பேரும் ஏற்கனவே தங்களுக்குள் இருந்த முன்விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு சஞ்சய்யை தகாத வார்த்தையால் பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதைக்கண்டு தடுக்க வந்த அவரது உறவினர் முருகம்மாளையும் அவர்கள் தாக்கியுள்ளனர். பதிலுக்கு சஞ்சய் தனது உறவினர்களான விஜய், தணிகாச்சலம், பெருமாள், சம்பத் ஆகியோருடன் சேர்ந்து சாமுண்டீஸ்வரி தரப்பினரை தாக்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தனர். இது சம்பந்தமாக இருதரப்பையும் சேர்ந்த 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்