மதுரையில் இருந்து துபாய் செல்லும் விமானம் தாமதம்

மதுரையில் இருந்து துபாய் செல்லும் விமானம் தாமதமானதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

Update: 2021-12-09 05:05 GMT
மதுரை.
மதுரையிலிருந்து நேற்று காலை 11 மணிக்கு துபாய்க்கு செல்லும் விமானத்தில் செல்ல 160 பயணிகள் தயாராக இருந்தனர்.
ஸ்பைஸ் ஜெட் நிறுவன விமானம் வழக்கமாக மும்பையில் இருந்து மதுரைக்கு காலை 8.30 மணிக்கு வந்து பின்பு 11 மணிக்கு துபாய் புறப்பட்டு செல்லும்.
இந்தநிலையில் நேற்று மும்பையிருந்து வரவேண்டிய விமானம் தாமதமாக இரவு 7 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தது. பின்பு மதுரையில் இருந்து இரவு 9.20 மணிக்கு துபாய்க்கு புறப்பட்டுச்சென்றது.
விமானம் தாமததால் அதில் செல்ல இருந்த பயணிகள் 160 பேர் விமான நிலையத்திலேயே காலை முதல் காத்திருந்தனர்.
விமான நிலைய வளாகத்திற்குள்ளே 9½ மணிநேரம் காத்திருந்ததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

மேலும் செய்திகள்