மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது
மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூரில் இருந்து ராஜபாளையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஒத்தக்கடை விலக்கு அருகே வாசுதேவநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படியாக பையுடன் வந்தவரை பிடித்து சோதனையிட்டனர். அதில் கஞ்சா கடத்தி வந்து இருப்பது தெரியவந்தது.
விசாரணையில், சிவகிரி அருகே உள்ளார் காட்டுச் சாலை தெருவைச் சேர்ந்த துரைமுருகன் (வயது 33) என்பது தெரியவந்தது. அவர் வைத்திருந்த பையில் கஞ்சா பொட்டலங்களாக பார்சல் செய்யப்பட்டு இருந்ததும், மொத்தம் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து துரை முருகனை போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.