பாம்பு கடித்து மாணவி பலி

சிவகாசி அருகே பாம்பு கடித்து பள்ளி மாணவி பரிதாபமாக பலியானார்.

Update: 2021-12-08 19:49 GMT
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள பி.பாறைப்பட்டியை சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவரது மகள் யோகேஸ்வரி (வயது 13). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் படுத்து இருந்த போது வீட்டிற்குள் நுழைந்த பாம்பு யோகேஸ்வரியை கடித்ததாக கூறப்படுகிறது. உடனே அவரை சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள பெரிய ஆஸ்பத்திரியில் அனு மதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து யோகேஸ்வரியின் தாய் தங்கம் கொடுத்த புகாரின் பேரில் எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்