எலக்ட்ரீசியனுக்கு 7 ஆண்டு சிறை
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த எலக்ட்ரீசியனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ராஜபாளையம் தோப்புபட்டி தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது27). எலக்ட்ரீசியன். இவர் கடந்த 16-10- 2017-ந் தேதி பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தனசேகரன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பாலமுருகனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க பரிந்துரை செய்தார்.