ஆசிரியை உள்பட 3 பேருக்கு கொரோனா
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று அரசு பள்ளி ஆசிரியை உள்பட மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று அரசு பள்ளி ஆசிரியை உள்பட மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அந்த ஆசிரியையின் குடும்பத்தினர், சக ஆசிரியைகள், பள்ளி மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவு இன்று (வியாழக்கிழமை) தெரியவரும். இதற்கிடையே 3 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். மேலும் 50 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.