காரைக்குடி
காரைக்குடியில் சென்ட்ரியோ குரூப் மேக்ஸ் பிட்னஸ் ஸ்டுடியோ சார்பில், மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது. 55 கிலோ பிரிவில் இருந்து 85 கிலோ பிரிவு வரையிலான 11 பிரிவுகளில் இப்போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து 220-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். காலை முதல் இரவு வரை நடைபெற்ற இப்போட்டிகளில் நாமக்கல்லை சேர்ந்த சரவணன் முதலிடத்தையும், கன்னியாகுமரியை சேர்ந்த மரியா ஜீஜோ 2-வது இடத்தையும், சென்னையைச் சேர்ந்த தயாளன் 3-ம் இடத்தையும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் பரிசுகளை வழங்கினார். சென்ட்ரியோ குழுமத்தின் இயக்குனர்கள் ஸ்டீபன், இளையராஜா, ரமேஷ் ராஜன், கார்த்திக் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கினர். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் சதீஷ்குமார், ஷாஜி, சிவா ஆகியோர் செய்திருந்தனர்.