கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கமுதி
முதுகுளத்தூர் அருகே நீர்கோழியேந்தல் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன்(வயது 21). கடந்த 4- ம் தேதி கீழத்தூவல் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் வீட்டிற்கு வந்த மாணவர் மணிகண்டன் உயிரிழந்துள்ளார். போலீசார் தாக்கியதால் தான் மணிகண்டன் உயிரிழந்துள்ளார் என்று அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மணிகண்டன் படித்த கல்லூரியான கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவு கல்லூரியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினர். கல்லூரி மாணவர் மணிகண்டன் இறப்பிற்கு நீதி வழங்கக் கோரியும், அவரது குடும்பத்திற்கு இழப்பீடு மற்றும் ஒருவருக்கு அரசு வேலை வழங்க கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவனை தாக்கிய போலீசாரை கண்டித்து பதாகைகள் ஏந்தி, கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.