மனைவி பிரிந்து சென்றதால் கூலி தொழிலாளி தற்கொலை

மனைவி பிரிந்து சென்றதால் கூலி தொழிலாளி தற்கொலை;

Update: 2021-12-08 18:47 GMT
பொள்ளாச்சி

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32). கூலி தொழிலாளி. இவர் திருமணமாகி குடும்பத்துடன் பொள்ளாச்சி அருகே உள்ள நடுப்புணியில் வசித்து வந்தார். 

இவர் அடிக்கடி மது குடித்ததால் மனைவி கோபித்துக் கொண்டு கேரளாவில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட மணிகண்டன் குடிபோதையில் வீட்டின் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து வடக்கிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்