குடியிருப்பு பகுதியில் விழுந்து இருந்தால் உயிரிழப்பு அதிகரித்து இருக்கும்

குடியிருப்பு பகுதியில் விழுந்து இருந்தால் உயிரிழப்பு அதிகரித்து இருக்கும்

Update: 2021-12-08 18:31 GMT

குடியிருப்பு பகுதியில் விழுந்து இருந்தால் உயிரிழப்பு அதிகரித்து இருக்கும் 
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் 14 பேர் சென்ற ராணுவ ஹெலிகாப்டர், குன்னூர் காட்டேரி பூங்கா அருகில், நஞ்சப்ப சத்திரம் பகுதியில் மலைப்பாங்கான பள்ளத்தாக்கில் விழுந்து தீப் பிடித்து எரிந்தது. விபத்து நடந்த பகுதியில் இருந்து சில அடி தூரத்தில் தான் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு உள்ளது. 

இந்த குடியிருப்பு பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து இருந்தால் குடி யிருப்பு பகுதியை சேர்ந்த பொதுமக்களும் விபத்தில் சிக்கி உயிரிழப்பு அதிகரித்து இருக்கும். விபத்து நடந்தபகுதி பள்ளத்தாக்கு என்பதால் மீட்பு பணியை மேற்கொள்ள தாமதம் ஆனது. 

2 பேர் மட்டுமே கருகிய நிலையில் வெலிங்டன் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டனர். அதில் ஒருவர் உயிரிழந்தார். மற்ற 12 பேரும் ஹெலிகாப்டர் விழுந்த இடத்திலேயே கருகி இறந்தது தெரியவந்து உள்ளது. 

மேலும் செய்திகள்