ஹெலிகாப்டரில் இருந்த கருப்பு பெட்டி எங்கே தேடும்பணி தீவிரம்

ஹெலிகாப்டரில் இருந்த கருப்பு பெட்டி எங்கே தேடும்பணி தீவிரம்

Update: 2021-12-08 18:26 GMT

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் சென்ற எம்.ஐ. 17வி 5 ரக ஹெலிகாப்டர் ரஷியாவில் தயாரிக்கப்பட்டது. ஹெலிகாப்டர் விழுந்த இடம் மலைப்பள்ளத்தாக்கு பகுதியாகும். ஹெலிகாப்டர் மோதி தீப்பிடித்த வேகத்தில் உதிரிபாகங்கள் எரிந்து நலாபுறமும் சிதறின. 

விமானத்தில் உள்ள கருப்பு பெட்டியில் விபத்துக்கு முன் கடைசி நிமிடத்தில் பைலட் பேசியது பதிவாகி இருக்கும். மேலும் எவ்வளவு அடி உயரத்தில் பறந்தது என்பன உள்ளிட்ட விவரங்களும் பதிவாகி இருக்கும். விபத்துக்கான காரணத்தை கண்டறிய கருப்பு பெட்டி முக்கியமானது என்பதால், கருப்பு பெட்டியை தேடும் பணி நடைபெறுகிறது.

 அந்த பகுதியில் இரவில் அதிக வெளிச்சம் தரக்கூடிய மின்விளக்குகளை பொருத்தி, விமானப்படையினர் தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்