தடுப்பணையில் மூழ்கிய வாலிபர் 2 நாட்களுக்கு பின்னர் பிணமாக மீட்பு

தடுப்பணையில் மூழ்கிய வாலிபர் 2 நாட்களுக்கு பின்னர் பிணமாக மீட்பு

Update: 2021-12-08 18:06 GMT
வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே தடுப்பணையில் மூழ்கிய வாலிபர் 2 நாட்களுக்கு பின்னர் பிணமாக மீட்கப்பட்டார். 

குளிக்க சென்றார்

வாணியம்பாடி சி. எல்.ரோடு பகுதியை சேர்ந்தவர் சகாபுதீன் (வயது 19). இவர் தனது நண்பர்கள் மூன்று பேருடன் நேற்று முன்தினம் தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள புல்லூர் தடுப்பணையில் குளிக்கச் சென்றார். அங்கு குளித்தபோது ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். 

இதுகுறித்து தகவலறிந்ததும் குப்பம் தீயணைப்புத் துறையினரும், வருவாய்த் துறையினரும் சகாபுதீனை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

பிணம் மீட்பு

இந்த நிலையில் இரண்டு நாட்களுக்குப் பின்பு நேற்று காலை 11 மணி அளவில் புல்லூரில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தமிழகப் பகுதியான ஆவாரம் குப்பம் பாலாற்றின் கரையோரம் சகாபுதீன் பிணமாக கிடந்தார். 

அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்