திருவேற்காட்டில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டரிடம் நூதன முறையில் ரூ.1 லட்சம் ‘அபேஸ்’

திருவேற்காட்டில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டரிடம் நூதன முறையில் ரூ.1 லட்சம் ‘அபேஸ்’.

Update: 2021-12-08 17:57 GMT
பூந்தமல்லி,

திருவேற்காடு, அபிராமி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் கருணாகர பாண்டியன் (வயது 65). இவர் போலீசாக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இந்த நிலையில், நேற்று மதியம் இவர் திருவேற்காட்டில் உள்ள வங்கிக்கு சென்று அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். பின்னர், வங்கியின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளில் பணம் வைத்திருந்த பையை தொங்கவிட்டநிலையில் திரும்பி பார்க்கும் போது கீழே 10 மற்றும் 20 ரூபாய் நோட்டுகள் இருந்ததை கண்டார். பின்னர், அதனை எடுத்து யாருடையது என்று கேட்டு விட்டு திரும்பி பார்த்தபோது சைக்கிளில் வைத்திருந்த பணப்பை மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து திருவேற்காடு போலீசில் புகார் அளித்தார். திருவேற்காடு போலீசார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.1 லட்சம் பணத்தை திருடி சென்ற நபர்கள் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

அதேபோல் ஆவடி அடுத்த மிட்டனமல்லி ராகவா நகரை சேர்ந்தவர் மகாலிங்கம் (55). இவர் நேற்று ஆவடி அடுத்த சேக்காடு பகுதியில் சி.டி.எச். சாலையில் உள்ள ஒரு வங்கியில் ரூ.75 ஆயிரத்தை எடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த போது, மர்ம நபர் பணத்தை எடுத்துக் கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்