திருவொற்றியூர்-மணலி மேம்பால பணிகளை விரைந்து முடிக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்

திருவொற்றியூர்-மணலி மேம்பால பணிகளை விரைந்து முடிக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்.

Update: 2021-12-08 17:53 GMT
திருவொற்றியூர்,

சென்னை திருவொற்றியூரில் இருந்து மணலி செல்லும் சாலையில் கடந்த 2017-ம் ஆண்டு பக்கிங்காம் கால்வாய் மீது மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கியது.4 ஆண்டுகளாகியும் மேம்பால பணிகள் முடிவடையவில்லை. இதனால் 1.5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மணலி செல்ல வேண்டியவர்கள் சத்தியமூர்த்தி நகர் வழியாக. 6 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்கின்றனர்.

எனவே பொதுமக்களின் நலன் கருதி கிடப்பில் போடப்படுள்ள மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருவொற்றியூர் பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பகுதி செயலாளர் கதிர்வேலு தலைமையில் அக்கட்சியினா் மேம்பாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல் குறித்து தகவல் அறிந்ததும் திருவொற்றியூர் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 50 பேரை கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

மேலும் செய்திகள்