அரக்கோணம்
அரக்கோணம் டவுன் ஹால் தெருவை சேர்ந்தவர் கெஜலட்சுமி (வயது 38). இவர் அரக்கோணத்தை அடுத்த அன்வர்திகான் பேட்டையில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். தினமும் வீட்டில் இருந்து பள்ளிக்கு ஸ்கூட்டரில் சென்று வருகிறார்.
வழக்கம்போல நேற்று மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய போது அரக்கோணம்-சோளிங்கர் சாலையில் சித்தேரி அருகே வரும் போது இவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் கெஜலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் செயினை பறித்து சென்றனர். இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசில் அளித்த புகாரின் பேரில் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தாலுகா போலீசார் தேடி வருகின்றனர்.