இருக்கூரில் கஞ்சா விற்ற மளிகை கடைக்காரர் கைது
இருக்கூரில் கஞ்சா விற்ற மளிகை கடைக்காரர் கைது
பரமத்திவேலூர்:
மேற்கு வங்க மாநிலம் பெட்டனா பகுதியை சேர்ந்தவர் கமல். இவருடைய மகன் அக்பர் உசேன் (வயது 34). இவர் கபிலர்மலை அருகே உள்ள இருக்கூரில் தங்கி மளிகை கடை நடத்தி வந்தார். இவரது கடையில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் நேற்று இருக்கூரில் உள்ள அக்பர் உசேனின் மளிகை கடைக்கு சென்று சோதனை செய்தனர். அதில் மளிகை கடையில் மறைத்து வைத்து விற்பனை செய்த ½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து போலீசார் மளிகை கடையில் கஞ்சா விற்பனை செய்த அக்பர் உசேனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.