ஜேடர்பாளையம் அருகே நிலப்பிரச்சினையில் பெண் மீது தாக்குதல்; விவசாயி கைது

ஜேடர்பாளையம் அருகே நிலப்பிரச்சினையில் பெண் மீது தாக்குதல்; விவசாயி கைது

Update: 2021-12-08 17:08 GMT
பரமத்திவேலூர்:
ஜேடர்பாளையம் அருகே உள்ள ஜமீன்இளம்பள்ளியை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 40). விவசாயி. இவருக்கும், அதே ஊரை சேர்ந்த சின்னுசாமி என்பவருக்கும் தோட்டத்தில் நிலப்பிரச்சினை சம்பந்தமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சின்னசாமியின் மனைவி சந்திரா (44) தோட்டத்திற்கு சென்றபோது முன் விரோதத்தை மனதில் வைத்து அவரிடம் தமிழ்செல்வன் தகராறு செய்தார்.
இதில் தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த தமிழ்செல்வன் கடப்பாரையால் சந்திராவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த சந்திராவை அவரது உறவினர்கள் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தமிழ்செல்வனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்