குழந்தை திருமணம், போதை பொருள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

போலீசார் சார்பில் குழந்தை திருமணம், போதை பொருள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.;

Update: 2021-12-08 16:03 GMT
கம்பம்:
கம்பம் சி.பி.யூ. மேல்நிலைப்பள்ளியில் போலீசார் சார்பில் குழந்தை திருமணம், போதை பொருள் குறித்து மாணவ-மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா தலைமை தாங்கி பேசினார். 
அப்போது அவர் பேசுகையில், மாணவ-மாணவிகள் தங்களுடன் படிப்பவர்கள் மற்றும் தங்களது குடும்பத்தினர், உறவினர்கள் மத்தியில், 18 வயதுக்கு கீழே உள்ள சிறுமிகளுக்கு திருமண ஏற்பாடு செய்வது சட்டப்படி குற்றம் ஆகும் என்று எடுத்துரைக்க வேண்டும். மேலும் குழந்தை திருமணம் குறித்து தெரியவந்தால் உடனே போலீசார் மற்றும் சைல்டு லைன் அமைப்புக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் சாலை விதிகளை மதிக்க வேண்டும். பஸ்சில் படிக்கட்டு மற்றும் ஏணிகளில் தொங்கி செல்லக்கூடாது. மாணவர்கள் தவறான போதை பழக்கத்தில் ஈடுபடக்கூடாது. சகமாணவர்கள் அந்த பழக்கத்தில் இருந்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார். 
முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்தவர்களை தலைமை ஆசிரியர் அபுதாகிர் வரவேற்றார். இதில், போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா, போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ஞானபண்டிதநேரு மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்