கார் டிரைவர் கொலையில் ராணுவ வீரர் கைது
அலங்காநல்லூர் அருகே நடந்த கார் டிரைவர் கொலையில் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
அலங்காநல்லூர்,
அலங்காநல்லூர் அருகே நடந்த கார் டிரைவர் கொலையில் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
புகார்
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கடந்த 30-ந்தேதி கோட்டை மேடு- மெய்யப்பன் பட்டி பகுதியில் உள்ள ஒரு வயலில் கழுத்து அறுபட்டு வெட்டு காயங்களுடன் மர்மமான முறையில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
இது பற்றிய தகவல் அறிந்து கல்லணை கிராம நிர்வாக அலுவலர் கணேசன் அலங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்தவரின் பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அதை தொடர்ந்து சம்பவ இடத்தில் சேகரிக்கப்பட்ட தடயங்களை வைத்து தனிப்படை அமைத்து தீவிரமாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். முதல் கட்ட விசாரணையில் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பகுதி காமக்கா பட்டியை சேர்ந்த முருகன் மகன் பாண்டி (வயது37) கார் டிரைவர் தான் கொலை செய்யப்பட்டு கிடந்தார் என தெரிய வந்தது.
இவரது கார் ெரயில்வே ஸ்டேசன் நிறுத்தத்தில் இருந்து வாலிபர் ஒருவர், குமாரத்தை அடுத்த வடுகபட்டிக்கு போக வேண்டும் என கூறி வாடகைக்கு எடுத்து சென்றுள்ளார். இது அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சி மூலம் துப்பு துலங்கியது. இதில் காரை வாடகைக்கு எடுத்து டிரைவரை கொலை செய்து காரையும் கடத்தியது தெரிய வந்தது.
கைது
திருமங்கலம் பகுதி பேரையூரை அடுத்த ஏ. தொட்டிய பட்டியை சேர்ந்த முனியாண்டி மகன் ராணுவ வீரர் மார்நாடு (வயது26) விடுமுறையில் வந்து இருந்த போது இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின் பேரில், துணை சூப்பிரண்டு பால சுந்தரம், இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் மற்றும் தனிப்படை போலீ சார் ஒருவார காலத்திற்குள் தீவிரமாக தேடி தலை மறைவாக இருந்த ராணுவ வீரர் மார்நாடுவை கைது செய்தனர். பின்னர் காரையும் கைபற்றினர்.