தூத்துக்குடியில் 4கடைகளில் திருடிய வாலிபர் கைது
தூத்துக்குடியில் 4கடைகளில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி- எட்டயபுரம் ரோடு பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் உள்ள 4 கடைகளில் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் பணம் மற்றும் பொருட்களை திருடிச் சென்றனர். இது தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். அப்போது, தூத்துக்குடி பிரையண்ட் நகரைச் சேர்ந்த முத்துமாரியப்பன் மகன் கவுதம் (19) மற்றும் 2 பேர் சேர்ந்து 4 கடைகளிலும் பூட்டை உடைத்து திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் கவுதமை நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.