கோழிப்பண்ணைக்குள் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது
போச்சம்பள்ளி அருகே கோழிப்பண்ணைக்குள் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.;
மத்தூர்:
போச்சம்பள்ளி அருகே உள்ள மேட்டுப்புலியூர் கிராமத்தில் கோழிப்பண்ணை ஒன்று உள்ளது. நேற்று அதிகாலை கோழிப்பண்ணையில் 12 அடி நீள மலைப்பாம்பு ஒன்று புகுந்தது. இதனை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சிலர் அந்த பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் வனத்துறையினர் யாரும் வரவில்லை. இதையடுத்து பொதுமக்களே அந்த மலைப்பாம்பை சென்றாயமலைக்கு கொண்டு சென்று விட்டனர்.