அரசு பஸ்சில் தொங்கியபடி மாணவர்கள் பயணம்

தேன்கனிக்கோட்டையில் அரசு பஸ்சில் தொங்கியபடி மாணவர்கள் பயணம்-எச்சரித்து வேனில் அனுப்பி வைத்த சப்-இன்ஸ்பெக்டர்

Update: 2021-12-08 14:38 GMT
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டையில் இருந்து அய்யூர் மலை கிராமத்துக்கு நேற்று மாலை அரசு பஸ் ஒன்று சென்றது. இதில் கூட்டம் அதிகமாக இருந்ததால் சில பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தனர். இதனை அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட தேன்கனிக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் கவனித்தார். அவர் உடனடியாக பஸ்சை நிறுத்தி தொங்கியபடி சென்ற மாணவர்களை கீழே இறங்க செய்தார். பின்னர் எச்சரித்து, 2 சுற்றுலா வேன்களை ஏற்பாடு செய்து, மாணவர்களை அவர்களது பகுதிகளுக்கு அனுப்பி வைத்தார். 

மேலும் செய்திகள்