அடுத்தடுத்து மோதி 3 கார்கள் சேதம்

அடுத்தடுத்து மோதி 3 கார்கள் சேதம்;

Update: 2021-12-08 13:23 GMT
கூடலூர்

ஊட்டியில் இருந்து நேற்று மதியம் 12.30 மணிக்கு கூடலூர் வழியாக கர்நாடகாவுக்கு சுற்றுலா பயணிகளின் கார்கள் சென்று கொண்டு இருந்தது. கூடலூர் பழைய பஸ் நிலையம் தானியங்கி சிக்னல் பகுதியில் வந்தபோது திடீரென ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்தது. தொடர்ந்து முன்னாள் சென்ற 2 கார்கள் மீது ஒன்றன்பின் ஒன்றாக மோதியது. 

இதில் 3 கார்களும் பலத்த சேதமடைந்து நடுவழியில் நின்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து சேதமடைந்த கார்கள் அங்கிருந்து அகற்றப்பட்டது. பின்னர் 20 நிமிடங்களுக்கு பிறகு போக்குவரத்து சீரானது. 

மேலும் செய்திகள்