காடா ஜவுளி உற்பத்தி பாதிப்பால் லோடு கிடைக்காமல் லாரிகள் நிறுத்திவைப்பு

காடா ஜவுளி உற்பத்தி பாதிப்பால் லோடு கிடைக்காமல் லாரிகள் நிறுத்திவைப்பு

Update: 2021-12-08 12:33 GMT
பல்லடம் பகுதியில் காடா ஜவுளி உற்பத்தி பாதிப்பால் லோடு கிடைக்காமல் லாரிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
காடா துணி
பல்லடம் பகுதியில் முக்கிய தொழிலாக விசைத்தறி  உள்ளது. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்த தொழிலை நம்பி உதிரிபாகங்கள் தயாரிப்பு, லாரி போக்குவரத்து போன்றவைகளும் நடைபெற்று வருகின்றன. 
அது மட்டுமல்ல பல்லடம் பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட லாரி புக்கிங் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. பல்லடத்தில் உற்பத்தி செய்யப்படும் காடா துணிகளை லாரிகள் மூலம் வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக காடா துணிகள் போதிய அளவு புக்கிங் நடைபெறாததால், லாரிகள் இயக்காமல் நிறுத்தப்பட்டுள்ளன. 
காரணம் என்ன?
இது குறித்து லாரி உரிமையாளர்கள் கூறியதாவது
சாதாரண நாட்களிலேயே பல்லடத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு தினமும் 100 லாரிகள் வரை செல்லும். கடந்த சில நாட்களாக காடா ஜவுளி உற்பத்தி தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தினசரி குறைந்த அளவிளான லாரிகள் மட்டுமே புக்கிங் ஆகிறது. இதனால் மற்ற லாரிகள் இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. லாரிகளுக்கு பாரம் ஏற்றும் தொழிலாளர்களும் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். காடா ஜவுளி உற்பத்தி தொழில் பழைய நிலைக்கு திரும்பினால் தான் லாரிகள் மீண்டும் முழுமையாக இயங்கும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்