வடமாநில வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
வடமாநில வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
அனுப்பர்பாளையம்,
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சஞ்சய். இவர் திருப்பூர் பிச்சம்பாளையத்தை அடுத்த சின்னபொம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தங்கி, பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை அறையில் தனியாக இருந்த சஞ்சய் திடீரென தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து சஞ்சய் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.