குன்னத்தூர் அருகே கம்மாள குட்டை கிராமம் பொலையம்பாளையத்தில் விநாயகர், மகா மாரியம்மன், கருவலூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணியளவில் இரண்டாம் கால யாகபூஜை, நாடி சந்தானம், தீபாரதனை யாத்ர தானம், கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. 6 மணிக்கு விநாயகர் மகா மாரியம்மன் கோபுர விமான கலசங்களுக்கும், 6.45 மணிக்கு கருவலூர் மாரியம்மனுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகம், அலங்கார பூஜை, தச தரிசனம், தீபாரதனை நடைபெற்றது. குன்னத்தூர் குன்றபுரீஸ்வரர் கோவில் குருக்கள் அம்பி தலைமையில் நடைபெற்றது. அதை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.