தூத்துக்குடி மாவட்டத்தில் 177 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டில், இதுவரை 177 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர்

Update: 2021-12-08 11:31 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டில், இதுவரை 177 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
போக்சோ வழக்கு
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் நமச்சிவாயபுரம் இந்திராகாலனியை சேர்ந்தவர் அழகர்சாமி. இவருடைய மகன் சுப்பிரமணியன் (வயது 53). இவரை விளாத்திகுளம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதே போன்று ஆத்தூர் அருகே உள்ள தலைவன்வடலியை சேர்ந்த மாரிசெல்வம் மகன் மதன் (22), பழையகாயல் ராமச்சந்திராபுரத்தை சேர்ந்த சேர்மபாண்டி மகன் முத்துப்பாண்டி (20) ஆகியோரை ஆத்தூர் போலீசார் கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்தனர்.
177 பேர்
இவர்கள் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சுப்பிரமணியன், மதன், முத்துப்பாண்டி ஆகிய 3 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர்.
இதனால் நடப்பு ஆண்டில் இதுவரை மாவட்டத்தில் 177 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்