அரூர் அருகே விஷ பூச்சி கடித்ததில் பிளஸ்- 2 மாணவர் சாவு

அரூர் அருகே விஷ பூச்சி கடித்ததில் பிளஸ்- 2 மாணவர் சாவு

Update: 2021-12-08 05:10 GMT
அரூர்:
அரூர் அருகே உள்ள கீழானூர் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவருடைய மகன் சூரியபிரகாஷ் (வயது 17). இவர் அரூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருடைய காலில் விஷ பூச்சி கடித்து விட்டது. இதனால் வலியால் துடித்த அவரை அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சூரிய பிரகாஷ் உயிரிழந்தார். இதுகுறித்து அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்